ஏறத்தாழ ஜூன் 2 ஆம் திகதியிலிருந்து தமிழகம் முழுமைக்கும் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் 34 மாவட்டங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் மற்றும் தயாரிப்பு கொள்கைகள்தான் இந்த நிலைக்கு காரணம் என பா.சிதம்பரம்
குறை கூறியுள்ளார்.
தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று நாள்தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாக காணவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.