ஆனந்த் ஐயா, இந்தியா எங்கும் குறுகிய காலத்தில் இந்த பெயர் பிரபலம் அடைந்துள்ளது.
இதற்கு காரணம் இவரிடம் கொரோனா மருந்து இருக்கிறது என்ற விடயம் தான்.இவர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பட்டணத்தில் வசிக்கும் சித்த மருத்துவர் .
இவருடைய கொரோனா குணமாக்கும் மருந்திற்கு உயர்நீதிமன்றமும் இந்தியாவின் ஆயுஸ் அமைச்சகமும் அனுமதி வழங்கி இருக்கிறது.
கண்ணில் விடும் சொட்டு மருந்து உட்பட மூன்று வகையான மருந்துகளை கொரோனாவுக்கு தயார் செய்திருந்தார் .இந்த மருந்துகள் நல்ல பலனை தந்ததால் மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் வந்து இந்த மருந்துகளை பெற்றுச் சென்றது.
அதிலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களின் உயிரையும் காப்பாற்றி உள்ளது ஆனந்த் ஐயாவின் மருந்து .மேலும் ஆம்புலன்சில் வந்தவர்களுக்கு கூட மருத்துவம் செய்து பல பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் ஆனந்த் ஐயா.
இதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால் அவரால் இயன்ற அளவுக்கு இலவசமாகவே மக்களுக்கு இந்த மருந்தை வழங்கினார். இதனை அடுத்து இவருக்கு மருந்து தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து பெரிய அளவில் தயாரிப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து தயாரித்து மக்களுக்கு வழங்கவும் செய்தார்
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆனந்த் ஐயா ஆந்திர அரசு இந்த மருந்து உற்பத்திக்கு போதுமான உதவிகளை செய்யவில்லை.
அதிகாரிகள் போதுமான மூலப் பொருட்களை மொத்தமாக தர தயாராக இல்லை.மேலும் இந்த பகுதியில் சமீப காலமாக மின்வெட்டும் ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.
முக்கிய அதிகாரிகள், வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளில் இருப்போர் என அனைத்து தரப்பு மக்களும் இவரின் கொரோனா மருந்துகளை வாங்கிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு பாரம்பரிய சித்த வைத்திய மருந்துகள் கிடைக்கும் போது அதை மேம்படுத்தி அதன் பலனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் முதல் கடமை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும், கூறியுள்ளனர்.