
மஹாராஷ்டிர மாநிலம்,புனேவில் கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ள அதேவேளை,பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புனேவின் உரவாடே பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த தீ விபத்தில் சிக்குண்டு மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொழிற்சாலையில் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.