January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று!

lion

சென்னையை அடுத்த  வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு இருந்ததால்  பரிசோதனை மாதிரிகளை பெற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கம் கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் உயிரியல் பூங்காவிலிருந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வண்டலூர் பூங்கா அதிகாரிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதுபோல் உயர் பாதுகாப்பு விலங்கின நோய்களுக்கான தேசிய இயக்கத்தில் இருந்தும் ஆலோசனைகளைக் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்காவில்  மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.