February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் புதிதாக 8 விமான பயிற்சி மையங்கள் அமைப்பு

இந்தியாவை சர்வதேச பறக்கும் பயிற்சி முனையமாக உருவாக்கும் முனைப்பில் எட்டு விமான பயிற்சி மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்திய வீரர்கள் வெளிநாட்டு விமான மையங்களில் பயிற்சி பெறுவதை நிறுத்திவிட்டு,உள்நாட்டு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்கும் விதமாக இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பறக்கும் பயிற்சித் துறை, தன்னிறைவை அடைவதற்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கலபுர்கி,கஜுராஹோ, லீலாபாரி, ஜல்காவோன், பெலாகவி போன்ற இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த 5 விமான நிலையங்களில் பொது போக்குவரத்து குறைந்த அளவிலேயே இருப்பதால் பறக்கும் விமான பயிற்சி மையங்களை இங்கு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் அயல் நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் விமான பயிற்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த மையங்கள் உருவாக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ஏலத்தில்,ஏசியா-பசிபிக்,ஸ்கைநெக்ஸ்,ஜெட்செர்வ்,ரெட்பெர்ட்,சம்வார்தனே ஆகிய விமான பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.