May 1, 2025 20:10:38

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கலைஞரின் 98 ஆவது பிறந்த நாள் இன்று: மக்கள் நலத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

Photo: Udhaystalin/Twitter

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்படுகிறது.

கலைஞரின் பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  மரியாதை செலுத்தினார்.

அத்தோடு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தியதுடன் கலைஞர் நினைவிடம் அருகே மரக்கன்றுகளை நட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு 5 திட்டங்களை அறிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்று நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 2 ஆவது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் என்று வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகள் பொதுமக்களுக்கு இன்றுமுதல் வழங்கப்படுகிறது .

தமிழ்நாடு அரசு அறநிலைய துறையின் கீழ் ஒருகால பூஜையுடன் இயங்கும் 12,959 கோயில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் , 10 கிலோ அரிசி மற்றும் 13 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் கொடுக்கப்படுகிறது.

கொரோனா நோய் தொற்றால் இறந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் , மருத்துவர், மருத்துவ பணியாளர், காவலர் மற்றும் நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது.

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களை வழங்குதல்’ ஆகிய உதவி திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.