October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தாக்கம்; இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறு, பெரு வர்த்தக நிறுவனங்கள்,தெருக் கடைகள் முதல், பெரிய கடைகள் வரை மூடப்பட்டுள்ளன.

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு,பலர் தங்களது தொழில்களை இழந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 2 கோடியே 27 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 40 கோடி பேர் பணி செய்து வந்த நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் 2 கோடியே 27 லட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது என அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரம் சீராகும்போது நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ள இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஷ் வியாஸ், ஆனால் முழு நிலைமையும் சீராகும் என்பதில் நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பு சாரா தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் எளிதில் மீளும் எனவும்,ஆனால் அமைப்பு சார்ந்த தொழில் துறை வேலை வாய்ப்புகள் மீள இன்னும் ஒரு வருடம் ஆகலாம் என அவர் கூறியுள்ளார்.

அதேபோல் 1.75 லட்சம் குடும்பங்களில் ,3 வீத குடும்பங்களின் வருமானம் மட்டுமே அதிகரித்திருப்பது கடந்த மாதம் வரையில் நடைபெற்ற ஆய்வில் தெரிய வந்துள்ளது.

42 வீத மக்களின் வருமானம் அதே நிலையில் இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் கூறியுள்ளார்.