October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவை தடுக்க மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ள வித்தியாசமான முயற்சி

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

மகாராஷ்டிராவின் கிராம பகுதிகளில் அதிக அளவில் தொற்று பரவி வருவதால் அம்மாநில அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளார்.

அதில் வெற்றி பெறுவோருக்கு, ரூ.50 லட்சம் வரை பரிசு கிடைக்குமென அவர் தெரிவித்திருக்கிறார்.

கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ,கொரோனா இல்லாத கிராமம், என்ற ஒரு போட்டியை மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது.

இந்தப் போட்டியின் கீழ் ஒவ்வொரு வருவாய் பிரிவிலும் கொரோனா இல்லாத 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

முதல் பரிசு ரூ.50 லட்சம், இரண்டாவது பரிசு ரூ.25 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் ஆறு வருவாய் பிரிவுகள் இருப்பதால், இதற்கான மொத்த பரிசுத் தொகை 5.4 கோடி மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

போட்டியில் வெற்றி பெறும் கிராமங்களுக்கு பரிசுத் தொகையோடு கூடுதல் தொகையும் ஊக்கமாக கிடைக்கும்.

இந்தப் பரிசுப் பணம் கிராமங்களின் வளர்ச்சிப் பணிக்காக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ஆகவே இந்த பணப்பரிசு பெறுவதற்காக,மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமங்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட முழுவீச்சில் தயாராகி வருகின்றன.