November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்றிற்கு 10 ஆயிரம் பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமானதை அடுத்து,முழு ஊரடங்கிற்கு பின்னர் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாது இருப்பது கவலையளிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் பத்தாயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவால் 21 லட்சத்து 23 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 24 ஆயிரத்து 722 ஆக அதிகரித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 131 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆவது நாளாக குறைந்திருந்தாலும்,கடந்த மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.