புரேபாலம் என்ற ஆந்திராவில் உள்ள கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியிருக்கிறார் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு.
தற்சமயம் கொரோனா தொற்று அதிகம் உள்ள இரண்டாவது அலையில் தன்னால் முடிந்த உதவியாக இந்த சிறப்பான பணியை செய்து இருக்கிறார் மகேஷ்பாபு.
தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும்கூட தமிழ்நாட்டிலும்,கேரளாவிலும்,கர்நாடகாவிலும் இவருக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு.
பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்திருந்தார்.
இதற்கு முன்னரே புரேபாலம், சித்தாபுரம் எனும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து புனரமைப்புப் பணிகளை செய்திருந்தார்.
ஹீல் எ சைல்ட் அமைப்புடன் இணைந்து ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த கதாநாயகனும்,இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்த நாளையொட்டி மகேஷ் பாபு முழு கிராமத்திற்கும் தன்னுடைய சொந்த செலவில் தடுப்பூசி அளித்தார் என்பது பாராட்டுக்குரிய விஷயம்.