November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா சிகிச்சை; பாரம்பரிய மருத்துவத்துக்கு ஆந்திர அரசு அனுமதி; ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுப்பு

ஆந்திராவில் ஆனந்தய்யா என்பவர் கொரோனா நோய்த் தொற்றுக்கு, ஆயுர்வேத மருந்து வழங்கியதால் அந்த கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் படையெடுத்து வந்தனர்.

இதனை அறிந்த ஆந்திர அரசு இந்த மருந்துகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆயுர்வேத மருந்து வழங்குவதை இடை நிறுத்தி வைத்திருந்தது .

இதனை அடுத்து ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆர் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஆனந்தய்யா என்பவர் தயாரித்து வழங்கும் மருந்தில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லையென்று தெரிய வந்தது.

இந்நிலையில் ஆய்வுகள் முடிந்து அறிக்கை வெளியாகி உள்ள நிலையில்,நெல்லூர் அருகே கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் வழங்கப்பட்ட ஆயுர்வேத மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஆனந்தய்யா வழங்கிய ஆயுர்வேத மருந்தை வாங்குவதற்கு கிருஷ்ணபட்டினம் பகுதிக்கு தொடர்ந்து மக்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இதனையடுத்து பொலிஸார் மூலமாக அறிந்த ஆந்திர அரசு மருந்தினை ஆய்வுக்கு உட்படுத்தியது.