கொரோனா தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க மாநிலங்கள் ஒன்றாக நிற்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்நிலையில் பற்றாக்குறை காரணமாக சர்வதேச அளவில் இருந்து தடுப்பூசிகளை பெறலாம் என மத்திய அரசு தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
தற்போது மாநிலங்களுக்கு தடுப்பூசி தேவை ஏற்பட்டுள்ள நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பா.ஜ.க அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் வாயிலாக,தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசியை, மத்திய அரசு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்கள் கூட்டாக முன் வைக்க வேண்டும் என பினராயி விஜயன் மாநில முதலமைச்சர்களை கேட்டு கொண்டுள்ளார்.