October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருமண மண்டப சொத்து வரி வழக்கு : நீதிபதி ரஜினிகாந்திற்கு கடும் எச்சரிக்கை!

ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி தொடர்பான வழக்கில் நீதிபதி, நடிகர் ரஜினிகாந்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தின் சொத்து வரி நிலுவையாக உள்ளமை குறித்து சென்னை மாநகராட்சி சில வாரங்களுக்கு முன்னர் அவருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

எனினும் இதனை ஏற்க மறுத்த நடிகர் ரஜினிகாந்த் இந்த வேண்டுகோளை இரத்து செய்யவேண்டும் என தெரிவித்து நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.

கொரோனா வைரஸ் முடக்கம் காரணமாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நிகழ்வுகள் எதுவும் இடம்பெறுவதில்லை என சுட்டிக்காட்டியிருந்த அவர், கொரோனா கால வரி குறைப்பிற்கு மண்டபத்திற்கு தகுதி உள்ளது என தெரிவித்து சொத்து வரி அறவிடுவதை இரத்து செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த வேளை, மாநகராட்சி அனுப்பிய உத்தரவிற்கு எதிராக பத்து நாட்களிலேயே மனு தொடர்ந்தது, நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி ரஜினிகாந்த் தரப்பை கடுமையாக சாடினார்.

வழக்கை ஏற்க முடியாது அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார்.இதனை தொடர்ந்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது.