
மேற்குவங்கத்தில் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் தான் மத்திய அரசு எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக மம்தா பானர்ஜி சாடியிருக்கிறார்.
தேர்தலின்போது தனக்கு எதிராக செயல்பட்டு தோற்றுவிட்டதால் தான் இவ்வாறு செயல்படுகிறீர்களா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
என்னை இப்படி இழிவுபடுத்தி தினம் தினம் சண்டை போட வேண்டாம் எனவும் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்குவங்க மக்களின் நலனுக்காக தங்களின் பாதம் தொட்டு பணிந்து கேட்கவும் தான் தயாராக இருக்கிறேன் எனவும், அரசியல் பழிவாங்கலை விட்டு எனது மாநில மக்களின் நலன் காக்க உதவுங்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
முன்னதாக யாஸ் புயலால் மேற்கு வங்கம் ,ஒடிசா மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று பார்வையிட்டார் .
அப்போது முதலமைச்சர்களுக்கான சந்திப்பில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மட்டுமே பிரதமரை சந்தித்ததாகவும் மம்தா பானர்ஜி அதனை புறக்கணித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இறுதியாக மம்தா பானர்ஜி பிரதமரை தனியாக 15 நிமிடங்கள் சந்தித்து தனது கோரிக்கைகளை முன் வைத்ததாக தெரிகிறது .இந்நிலையில் தன் மேல் குற்றம் சுமத்திய எதிர்க்கட்சியினருக்கு பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில்,இல்லாதவற்றை பேசி தன்னை இழிவுபடுத்த வேண்டாம் என மத்திய அரசை மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தான் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முன்னதாகவே திட்டமிட்டுவிட்டதாக கூறியுள்ள மம்தா பானர்ஜி ,பிரதமரும் திடீரென அவரது பயணத்தை திட்டமிட்டு வந்ததாக தெரிவித்திருக்கிறார் .
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இந்தப் பயணத்தைத் பிரதமர் திட்டமிட்டுள்ளார் என மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
இருந்தபோதும் தன் நேரத்தை ஒதுக்கி விமான தளத்தில் 15 நிமிடங்கள் வரை பிரதமரை சந்தித்துவிட்டுத்தான் சென்றதாக மம்தா தெரிவித்துள்ளார் .
சில கோரிக்கைகளை பிரதமரிடம் கொடுத்துள்ளதாகவும்,தான் செல்வதற்கு முன் பிரதமரின் அனுமதியைப் பெற்றே கிளம்பியதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான வெள்ள பாதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மட்டுமே பங்கேற்கவில்லை எனக் கூறியுள்ள மம்தா பானர்ஜி இருந்தபோதிலும் பா.ஜ.க.வினர் தன்னை இழிவுபடுத்துவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மேற்குவங்க முதன்மை செயலர் அலோபன் பந்தோப்தாயை திரும்பப் பெறுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.