October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய சமூக வலைத்தளங்கள்

Social Media / Facebook Instagram Twitter Common Image

ட்விட்டர் தவிர,கூகுள்,பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப் நிறுவனங்கள் இந்திய அரசின் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் சமூக வலைத்தளங்கள்,செய்தி இணையத்தளங்கள், ஓடிடி தளங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசு டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வந்தது.

இதற்கு ட்விட்டர் ,ஃபேஸ்புக், யூடியூப்,வட்ஸ் அப் போன்ற சமூக வலைத் தளங்கள் விதிகளை பின்பற்ற கால அவகாசம் கேட்டிருந்தன.

இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் கருத்து சுதந்திரம் பாதிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

கருத்துச் சுதந்திரம் பற்றி ட்விட்டர், இந்தியாவுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை எனக் கூறி மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

தற்போது மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

புதிய விதிகளின்படி முரண்பட்ட கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூக வலைத்தளமும் இந்தியர்களை தனி அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசின் விதிகளில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.