January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையில் இருந்து பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்

File Photo

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கமைய பேரறிவாளன் இன்று காலை சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை புழல் சிறையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு பிறகு பொலிஸ் பாதுகாப்புடன் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளன் சென்றார்.

பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே 18 அன்று முதல்வர் ஸ்டாலினுக்குக் நீண்ட விடுப்பு வழங்கிட கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து மே 19 ஆம் திகதி உரிய விதிகளைத் தளர்த்தி, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது,  பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என  சிறை விதிகள் இருக்கின்றன.

தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.