டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பும் மக்களை இந்திய அரசு மதிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து என டுவிட்டர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.
டுவிட்டரின் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது,தவறானது என இந்திய அரசு தெரிவித்திருக்கிறது.
டுவிட்டரின் கருத்து இந்தியாவை இழிவுபடுத்தும் முயற்சி என மத்திய அரசு கூறியுள்ளது.
டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக ஊழியர்களுக்கு இந்தியா எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என இந்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.