July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் 22 கோடி கொவிட் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகம்;மத்திய சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இந்தியாவில் மாநிலங்களுக்கு மட்டுமே 22 கோடிக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அதில் 1.77 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் மாநிலங்கள் வசம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே கொரோனா பரவிவரும் நிலையில்,18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு தடுப்பு மருந்துகளை மாநிலங்களுக்கு விநியோகித்து வருகிறது.அதிலும் தடுப்பு மருந்துகளை உலக நாடுகளிடமிருந்து பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

ஒவ்வொரு மாதமும், மத்திய மருந்துகள் பரிசோதனைக்கூடம் அனுமதிக்கும் தடுப்பூசி நிறுவனங்களின் மருந்துகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக மத்திய சுகாதார துறை தெரிவித்திருக்கிறது.

மத்திய அரசு இதுவரை மாநிலங்களுக்கு இலவச விநியோகம் மற்றும் நேரடி கொள்முதல் மூலம் 22 கோடிக்கும் மேற்பட்ட 22,00,59,880 தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.