அடுத்த 12 மணி நேரத்தில் யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மத்திய வங்கக் கடலின் பல பகுதிகளில் மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என கூறப்படுகிறது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாஸ் அதி தீவிர புயல், புதன்கிழமை 26 அதிகாலையில், வடக்கு ஒடிசா, மேற்கு வங்க கரையோர சந்த்பலி-தம்ரா துறைமுகத்திற்கு அருகே சென்றடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற்பகலில் பாலசோர் அருகே 26 ம் திகதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா,ஒடிசா பகுதிகளில் கனமழை பெய்யும் என கூறப்படுகிறது .
இதனையடுத்து பல மாநிலங்களில் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் மீட்பு பணிகளுக்கான அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.