அண்மையில் The Family Man சீசன் 2 தொடரின் முன்னோட்டம் வெளியானது.வெளியான அன்றே தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. குறிப்பாக சீமான் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
மாநிலம் மட்டுமல்லாது உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் மத்தியிலும் இந்த முன்னோட்டமானது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் அழுத்தங்கள் அதிகரிக்க தமிழக அரசிடமும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இதை தொடர்ந்து தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.
அதில், The Family Man சீசன் 2 தமிழர்களின் உணர்வுகளை காயப் படுத்துவதாக இருக்கிறது. இத்தொடரை ஒளிபரப்பினால் மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை காப்பது கடினமாகும்.
எனவே தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுமைக்கும் இந்த தொடரை ஒளிபரப்பக் கூடாது என்று அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும் இந்த முன்னோட்டம் இருக்கிறது என்பதையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜூன் 4 ல் வெளியாக இருக்கும் இந்த தொடரில் பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் அஞ்சான் படத்தில் வில்லனாக வரும் மனோஜ் பாஜ்பாய் இந்த தொடரின் நாயகனாக நடிக்கிறார்.
இத்தகைய சர்ச்சைக்குரிய படங்களில் நடிக்கும்போது நடிகர் நடிகையர் ஒன்றுக்கு இரண்டு தடவை கதையை முழுமையாக கேட்ட பிறகு நடித்தால் நல்லது என சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.