July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் இறுதி ஒரு மாதத்தில் 1 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

இந்தியாவில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 4,455 பேர் கொரோனா மரணங்கள் பதிவாகியதையடுத்து கொரோனா தொற்று எண்ணிக்கை 303,751 ஆக உயர்வடைந்துள்ளது.

எனினும் நாட்டின் பல மரணங்கள் பதிவு செய்யப்படாததால் மொத்த எண்ணிக்கை இதனை விடவும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பாதிப்பில் 26 மில்லியன் வழக்குகளை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான அறிக்கைகளின் படி இந்தியாவில் 2,67,51,681 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் 2 ஆம் அலை ஆரம்பமானது முதல் கடைசி ஒரு மாதம் வரையான குறைவான காலத்தில் 100,000க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த 26 நாட்களில் மட்டும் நாட்டில் 102,533 கோவிட் -19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கொரோனா நோயாளர்களின் அதிகரிப்புடன் நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகள் திறன்களை மீறியுள்ளன.

இதனிடையே கடந்த நாட்களில், கொரோனா சிகிச்சையுடன் தொடர்புடையதாக ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருகின்றமை இந்தியாவின் ஒட்டுமொத்த நெருக்கடியை மேலும் அதிகரிக்க காரணமாகியுள்ளது.

இதனிடையே உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 16,75,06,974 ஆகவும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,77,787 ஆகவும் பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் தொற்றுக்குள்ளான 1,54,47,804 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, 14,85,81,383 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.