July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் “கருப்பு பூஞ்சை” தொற்று நோயால் 8,800 க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இந்தியாவில் அதிகரித்து வரும் “கருப்பு பூஞ்சை” தொற்று நோயால் 8,800 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு முன்னர் நாட்டில் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று பேருக்கே “கருப்பு பூஞ்சை” தொற்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோாக இரண்டாவது அலையின் தீவிர தன்மையுடன் கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்படுபவர்களிடையே “கருப்பு பூஞ்சை” தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இந்தியாவில் பதிவாகி வருவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நோய் ஏற்படுபவர்களிடையே இறப்பு 50% ஆக காணப்படும் நிலையில், சிலரை குணப்படுத்துவதற்காக ஒரு கண்ணை அகற்ற வேண்டிய சூழ்நிலையும் உருவாகும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பாதிக்கும் மேற்பட்ட “கருப்பு பூஞ்சை” நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக வழங்கபப்டும் ஸ்டீராய்டு மருந்துகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றமை காரணமாக “கருப்பு பூஞ்சை” தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது 15 மாநிலங்களில் 8 முதல் 900 பேருக்கு “கருப்பு பூஞ்சை” தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பை தொடர்ந்து, இந்தியாவின் 29 மாநிலங்களில் “கருப்பு பூஞ்சை” நோயை ஒரு தொற்று நோயாக அறிவிக்குமாறு மத்திய அரசு கோரியுள்ளது.

“கருப்பு பூஞ்சை” தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவென 1,100 படுக்கைகளுடன் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு வரும், நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்குள் 8 முதல் 185 வரை உயர்வடைந்துள்ளது.
தற்போது அங்கு 400க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் 80% க்கும் அதிகமான நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவமனையின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இறப்பு விகிதம் 94% வரை உயரக்கூடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களிடையே நோய் தாக்கம் 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை இருக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க நோயாளிகள் மூக்கு, தொண்டையை சுத்தமாக  பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கொரோனாவிலிருந்து குணமடைபவர்கள் அடுத்த 3 மாதங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.