file photo: Twitter/ Greater Chennai Corporation
தமிழகத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்வுகள் இன்றிய, முழு நேர ஊரடங்கு அமுல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கின் போது, மருந்தகங்கள் மற்றும் நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பால், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிகைகளை விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களை வாகனங்கள் மூலம் மட்டும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளையும் இன்று இரவு 9 மணி வரையும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.