(Photo: soubhagyajourno/Twitter)
இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் காரணமாக கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் பலியாகி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற ஒரு நோய் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்திய அளவில் 7250 பேர் அளவில் இந்த நோய் தாக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழகத்திலும் இந்த கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியுகோர்மைகோசிஸ் எனப்படும் இந்த கருப்பு பூஞ்சை தொற்று தற்போது அதிகமாக பரவி வருவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனினும் தமிழகத்தில் 12 வயது சிறுமி ஒருவருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து எவ்வாறு வயது குறைந்தவர்களுக்கு வரும் என மருத்துவர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களில் இதன் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
தமிழ்நாடு, ராஜஸ்தான்,கர்நாடகா, தெலுங்கானா, ஹரியானா, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட தொற்று நோய் பட்டியலில் சேர்த்துள்ளன.
இதுவரை இந்தியாவில் 7,250 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 219 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.