November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் வழமையான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தேமுதிக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் இன்று வீடு திரும்பியுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.