(Photo:Pinarayi Vijayan/Twitter)
கேரள மாநிலத்தின் முதல்வராக 2 ஆவது முறையாக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஆளுநர் ஆரிப் முகமது கான் முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன் அவருடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
திருவனந்தபுரம் சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற பதவி ஏற்பு விழாவில் 2 ஆவது முறையாக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டதுடன், அவருக்கு ஆளுநர் ஆரீப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதனையடுத்து ஆளுநர் பூங்கொத்து கொடுத்து பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பினராயி விஜயனின் புதிய அமைச்சரவையில் பி.ஏ.முஹம்மது ரியாஸ், வி.சிவான்குட்டி, வீணா ஜார்ஜ், கே.என்.பாலாகோபால், வி.என்.வாசவன், சாஜி செரியன், பி ராஜீவ், எம்.பி.ராஜேஷ், கே ராதாகிருஷ்ணன், பி நந்தகுமார் எம்.வி.கோவிந்தன் போன்ற இளம் சிபிஎம் தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
கேரளாவில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 140 தொகுதிகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.