July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வதந்திகளை நம்ப வேண்டாம் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது”: தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவர், வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக கூறியுள்ளது.