January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக விஜயகாந்த் உடல் நலக் குறைவாக இருந்ததாகவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தேமுதிக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.