கொரோனா பெருந் தொற்று காலத்தை பயன்படுத்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதான மரியாதையை சிதைக்க விரும்புகிறார் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தோற்றத்தையும், பிரதமர் மோடி மீதான மரியாதையையும் சிதைக்க காங்கிரஸ் திட்டம் போட்டு உள்ளதாக சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்திருக்கிறார் .
உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், மோடியின் உருமாறிய வைரஸ் என்று கூறி, தேசத்தின் மரியாதையை சிதைக்க காங்கிரஸ் முனைகிறது.
வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் உதவியுடன் இந்தியாவின் நன் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் உருவான உருமாற்ற கொரோனா வைரஸ் என்று குறிப்பிட்டு அழைக்கவில்லை.
ஆனால்,இந்த வாய்ப்பை பயன்படுத்தி எதிர்க்கட்சியான காங்கிரஸ், தேசத்தின் மதிப்பை சிதைக்க தயாராக இருக்கிறது.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் ஆய்வுத் துறை தலைவர் ராஜீவ் கவுடா பா.ஜ.க.வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஆய்வு பிரிவுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் பா.ஜ.க போலியான டூல்கிட்டை தயாரித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நாடு கொரோனா தொற்றில் சிக்கி தவிக்கும் இந்த நேரத்தில், நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, பா.ஜ.க மோசடியான செயல்களை செய்கிறது என காங்கிரஸின் ஆய்வுத் துறை தலைவர் ராஜீவ் கவுடா குறை கூறியுள்ளார்.