May 29, 2025 20:17:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் ‘டவ்-தே’ புயல்- 21 பேர் பலி; 100 க்கு அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்

photo: Twitter/ ankita

மேற்கு இந்தியாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் ‘டவ்-தே’ புயல் தாக்கத்தின் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 க்கு அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

அரேபிய கடலில் ஏற்பட்ட புயல் நிலைமை குஜராத் மாநிலத்தின் ஊடாக இந்திய கரையைக் கடந்துள்ளது.

‘டவ்-தே’ புயல் காரணமாக 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதோடு, கடுமையான மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.

மும்பையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற 96 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், 177 மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

புயல் காரணமாக அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, மின் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளும் பாதிப்படைந்துள்ளன.

அபாய வலயத்தில் இருந்த 2 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.