July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டவ்-தே’ புயல் ; மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை; ஒன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்!

அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்-தே புயல் இரவு 8 முதல் 11 மணிக்குள் அதிதீவிர புயலாக குஜராத் மாநிலம் போர்பந்தல் மற்றும் மஹூவா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதால் அதிகளவில் மும்பை மாநகரில் மழை பெய்தது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் கேரளா, கோவா மற்றும் கர்நாடகா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

https://twitter.com/sandipGopani_/status/1394260224396054532?s=20

 

சூறாவளி காற்றால் மரங்கள் ஆங்காங்கே வேருடன் சாய்ந்துள்ளன.

டவ்-தே புயல் குஜராத்தில் கரையை கடப்பதால் மும்பையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது .

கிட்டத்தட்ட புயல் தாக்கும் பகுதிகளிலிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டவ்-தே புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் மும்பை விமான நிலையம் இரவு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு மீட்புப் பணிகளுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.