May 30, 2025 11:13:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதலமைச்சரை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கியுள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியதுடன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிறகு, ரஜினிகாந்த், ஸ்டாலின் முதன் முறையாக நேரில் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.