June 11, 2025 15:57:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி

கொரோனா தொற்று காரணமாக வளர்ந்து வரும் இளம் நடிகரான நித்திஷ் வீரா (45 காலமானார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் வல்லரசு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய பின்னர்  கூத்துப்பட்டறையில் சில வருடங்கள் பயிற்சி  எடுத்துக்கொண்டு, பின் அங்கிருந்து வெளியேறி திரைத்துறைக்கு முயற்சி செய்தார்.

இதனையடுத்து புதுப்பேட்டை, மற்றும் வெண்ணிலா கபடி குழு, சிந்தனை செய், பேரன்பு, அகிரா, ராட்சசி, எட்டுத்திக்கும் பற போன்ற படங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்தில் நடிகர் நிதிஷ் வீரா நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதேவேளை இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட அருண்ராஜா காமராஜின் கபாலி படத்தில் இவர் எழுதிய ‘நெருப்புடா’ பாடல் பலரின் பாராட்டையும் பெற்றிருந்தது.

தற்போது இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.