தமிழகத்தில் 10 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக தமிழக அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள், பத்திரப்பதிவு வருவாய், பெற்றோல் -டீசலுக்கான வரி மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளின் மூலமாக தமிழக அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வரும் நிலையில் 15 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசிற்கு சுமார் 2,020 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் பெற்றோல் , டீசல் மீதான வரி 386 கோடி ரூபாயும் தடைப்பட்டுள்ளது.
மேலும் பத்திரப்பதிவு மூலமாக கிடைக்க வேண்டிய 500 கோடி ரூபாய் வருமானம் முடங்கியுள்ளது என கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 நாட்கள் ஊரடங்கு காரணமாக ஒட்டு மொத்தமாக தமிழக அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊரடங்கு முடிந்தவுடன் மதுபானங்களின் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 24 ஆம் திகதி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.