July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸிஜன்

தமிழ்நாட்டில் ஒக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து ஒக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

விமானப்படை விமானங்கள் மூலம் , ஒவ்வொன்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 தாழ் வெப்பநிலை கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இவை தமிழகத்தில் மிகவும் முக்கியமான பகுதிகளுக்கு தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதுடன், நோயாளிகளுக்கான ஒக்ஸிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து பல உலக நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஒக்ஸிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் உதவியாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நெதர்லாந்து நாட்டிலிருந்து 80 மெட்ரிக் டன் ஒக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது