கொரோனா வைரஸ் தாக்கத்தினால்,இந்தியா முழுமைக்கும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கும், சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமுலில் உள்ளது.
தமிழ்நாட்டிலும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இருப்பினும் இந்தியா முழுமைக்கும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இதன் காரணமாக நாடு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் இதை சமாளிக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதல்வரின் நிவாரண நிதிக்கு, நிதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது பொது மக்களும், அரசியல் தலைவர்களும், எம்.பி, எம்.எல்.ஏக்களும்,வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் ,சிறுவர்கள் என பல்வேறு தரப்பிலிருந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகர் சிவகுமார்,சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாவை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
இதைப் போலவே அஜித்குமார் 25 லட்சம் ரூபா வழங்கியுள்ளார்.
அதேபோல்,சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மருமகன் விசாகன் மற்றும் அவர் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளனர்.
பிரபல இயக்குனர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.