July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லட்சத்தீவு – அரபிக்கடலில் புயல் அபாயம்: தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்!

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து எதிர்வரும் மணித்தியாலங்களில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அதனால் மே 17 வரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்றும், அதேபோல் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறும் போது இலங்கையிலும் பல மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடுமென்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.