தமிழகத்தில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் அம்புலன்ஸ் வாகனங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாட்களில் 250 அம்புலன்ஸ்களை தயார் செய்துள்ளார்.
அதற்கமைய கார்களில் அம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு ‘சிறப்பு அம்புலன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதுடன், 15 மண்டலங்களில் இந்த சேவை தொடக்கப்பட்டுள்ளது.
அம்புலன்ஸ் தட்டுப்பாட்டை ஒரே நாளில் தீர்வுகண்ட சென்னை மாநகராட்சி ஆணையரின் செயல் தற்போது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாள்கணக்கில் அம்புலன்ஸில் நோயாளிகள் இருப்பதால் புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாதுள்ளதால் இந்த சிறப்பு அம்புலன்ஸ் சேவை ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களை ஏற்றிச் செல்வதற்கு அம்புலன்ஸ் கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
https://twitter.com/jmeghanathreddy/status/1392518323431034884