
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உடல்நலக்குறைவால் தனது 80 ஆவது வயதில் இன்று அவர் காலமானதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
சீமானின் தந்தை மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் தங்களின் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.