June 16, 2025 23:31:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளார்.

‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்  கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அது தவிர சினிமா பிரபலங்களான கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தடுப்பூசியினை செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து இருக்கும் இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதுடன், அவருடைய இளைய மகள் சௌந்தர்யாவும் உடனிருந்தார்.

இதேவேளை, மகள் சௌந்தர்யா தனது டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.