கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி வழங்கக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பெருந் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான தேவைகளும் அதிகரித்துள்ள நிலையிலே தமிழக முதலமைச்சர் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
‘கொரோனோ பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.
மக்கள் வழங்கும் நிதி கொரோனா தடுப்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்’ எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவம் மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருவதாகவும் திடீர் அவசர செலவினங்களுக்காக புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாராளமாக நிதியுதவி வழங்குங்கள் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அத்தோடு மக்கள் அளிக்கும் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்கள் வழங்கும் நிதிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட உதவிக்கரம் நீட்டுங்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகத் தமிழர்களே!
உயிர்காக்க நிதி வழங்குவீர்! https://t.co/7P7Gcz5yxV— M.K.Stalin (@mkstalin) May 13, 2021