தமிழகத்தில் புதன்கிழமை மாத்திரம் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், சென்னையில் 7564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர 36 மாவட்டங்களில் 22,791 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்,சென்னையில் சிகிச்சை பெறுபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 40,613 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,தமிழகம் முழுவதும் இதுவரை 14,68,864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சென்னையில் மட்டும் மொத்தம் 4,12,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,79,658 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,72,735 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாக கூறப்படுகிறது.மொத்தமாக இதுவரை தொற்று உள்ளோர் எண்ணிக்கையில் ஆண்கள் 8,82,195 ,பெண்கள் 5,86,631, மூன்றாம் பாலினத்தவர் 38 பேராகும்.
அதேபோல், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் புதன்கிழமை மாத்திரம் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,சென்னையில் மாத்திரம் இதுவரை மொத்தம் 5,457 பேர் உயிரிழந்துள்ளனர் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.