இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்ட கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் புலனாய்வு அதிகாரி கே. ரகோத்தமன் 72 வயதில் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையைத் தொடர்ந்து, நியமிக்கப்பட்ட விசேட புலானாய்வுக் குழுவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக செயற்பட்டார்.
ரகோத்தமன், அவரது சேவைக் காலத்தின் 10 ஆண்டுகளை ராஜீவ் காந்தி கொலை வழக்கு புலனாய்வு நடவடிக்கைகளில் செலவிட்டுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது எனக் கூறி, முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.