November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் கொரோனா பரவலில் தமிழகம் 3 ஆம் இடம்; மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 3 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம், ஒடிசா, பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகா, மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கொரோனா பரவலில் தமிழகமே இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா, பீகார்  போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 6 மாநிலங்களில் சுமார் 1 இலட்சம் வரை கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 13 மாநிலங்களில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம், 17 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் கீழ் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.