January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கட்சி பாகுபாடின்றி பணியாற்றுவோம்’;ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் முயற்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் 16 ஆவது சட்ட பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில், படுக்கை வசதி, ஒக்ஸிஜன், மருந்து தேவை நெருக்கடி இருந்தால் உடனே அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதுடன், கொரோனாவில் இருந்து தமிழகத்தை காக்க கட்சிகளை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயல்படவேண்டும் எனவும் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கவும், கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காப்பதற்கு செயலாற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் 2 ஆவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை உணர்ந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதல் பணி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.