January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக புதிய சட்டமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கியது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று முற்பகல் ஆரம்பமாகியது.

தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் சட்டமன்றம் கூடியதுடன், முதல்வர் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து கடந்த 7 ஆம் திகதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்றது.

இதன் பின்னர் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நேற்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது.