July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2ஆவது முறையாக இன்றையதினம் இடம்பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சுமார் மூன்று மணித்தியாலயங்கள் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் ஏகமனதாக எதிர்க் கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தின்போது ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டதுடன் எதிக்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் குழப்பநிலை நிலவியது.

இதனையடுத்து அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரப்பூர்வ கடிதத்தை அதிமுக சார்பில் தங்கமஜணியும், வேலுமணியும் தலைமைச்செயலகம் சென்று சட்டப் பேரவை செயலாளரிடம் அளித்துள்ளனர்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவு செய்யாமல் இழுபறி ஏற்பட்டதுடன் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கிடையில் கருத்து வேற்றுமை இருந்து வந்தது.

இதேவேளை நடந்து முடிந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.