January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை காலமானார்

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிமேகலை சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி தனது 69 ஆவது வயதில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்