May 24, 2025 16:56:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி!

புதுச்சேரியில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்றுக்குள்ளான முதலமைச்சர் ரங்கசாமி, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ரெங்கசாமி கட்சி 20 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.

சில தினங்களுக்கு முன்புதான் என் ஆர் காங்கிரசை சேர்ந்த ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.