
கோமியம் குடித்தால் கொரோனா தாக்காது எனவும் அதை குடிப்பதால் தான் தனக்கு கொரோனா வரவில்லை எனவும் உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுரேந்தர் சிங் கோமியம் குடிக்கும் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு குறித்த அந்த வீடியோவில் ‘மக்கள் அனைவரும் ஒன்றாக கோமியம் குடிக்க முன்வர வேண்டும், கோமியத்தை எவ்வாறு குடிக்க வேண்டும், அது எவ்வாறு உடலில் செயல்படுகிறது என்ற விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.
மேலும், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்தும் தனக்கு கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என்றும், தான் முழு ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் கோமியம் குடிப்பதுதான் எனவும் அந்த வீடியோவில் சுரேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
#WATCH | BJP MLA Surendra Singh in UP's Ballia claimed drinking cow urine has protected him from coronavirus. He also recommended people to 'drink cow urine with a glass of cold water'. (07.05)
(Source: Self made video) pic.twitter.com/C9TYR4b5Xq
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 8, 2021